இயக்குனர் சங்கரால் கோபத்தின் உச்சிக்கே சென்ற இளையராஜா! ஆணவத்தில் பெரிய மனுஷன் செய்த செயல்..

shankar rajinikanth arrahman ilaiyaraajaa
By Edward Mar 14, 2022 10:54 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். ஜெண்டில் மேன் படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக ஆரம்பித்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்தார். ரஜினியின் ஆஸ்தான இயக்குனராக மணிரத்னத்திற்கு பிறகு சங்கர் இடம்பிடித்தார்.

அதேபோல் இசையிலும் இளையராஜாவிற்கு அடுத்து ஏ ஆர் ரகுமான் பிடித்தார். அப்படி இயக்குனர் சங்கர் கூட்டணியில் இளையராஜா இன்று வரை இசையமைத்து கொடுத்ததில்லை. இதுகுறித்து ஒரு மேடையில் சங்கரே கூறியிருக்கிறார்.

ஆனால் இளையராஜா வாய்ப்பு கொடுக்காத காரணம் வேறொன்று இருக்கிறதாம். ஒரு படத்தின் இசைக்காக சங்கரை இளையராஜா பல மணிநேரம் காத்திருக்க வைத்துள்ளாராம். அதன் காரணமாகவும் அவர்கள் இருவருக்கிடையில் பிரச்சனை ஆரம்பித்தது.

சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய உதவி இயக்குனர் கார்த்திக் என்பவர் வைபவை வைத்து கப்பல் படத்தினை இயக்கி இருந்தார். கதை நன்றாக இருந்ததால் சங்கர் அப்படத்தினை அவரது சொந்த பேனரில் எடுக்க முடிவு செய்திருந்தார். அப்படம் வெளியாகிய பிறகு இளையராஜா சங்கருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அப்படத்தின் ஒரு பாடலில் ஊருவிட்டு ஊரு வந்து என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். அதனால் தன்னுடைய பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்திய காரணத்திற்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறாராம். அதற்கு சங்கர் அப்பாடலை அனுமதி பெற்றுத்தான் படத்தில் வைத்தோம் என்று இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.