ரோட்ல நிக்குறவன் மனோபாலா இல்ல.. ஆணவத்தில் ஆடிய இளையராஜாவின் முகத்திரை உடைத்த ராஜன்
தமிழ் சினிமாவின் இசைஞானியாக திகழ்ந்து வரும் இளையராஜா, பல ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து ரசிக்க வைத்து வருகிறார். புகழின் உச்சிக்கே சென்ற இளையராஜா சிலரின் பகையாலும் ஆணவத்தில் நடந்து கொண்ட பேச்சாலும் வெறுப்பையும் சம்பாதித்து வந்துள்ளார்.
இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா மரணத்திற்கு பல நட்சத்திரங்கள் இரங்கல் செய்திகளை பகிர்ந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வந்தனர். இளையராஜாவும் தன் பங்கிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றினை பகிர்ந்தார். அதில், இரங்கல் தெரிவித்த இளையராஜா, எல்லா காலத்திலும் என்னை சந்தித்து வருபவர் மனோபாலா. கோடம்பாக்கம் மேம்பாலத்தை என் கார் தாண்டும் நேரத்தில் அங்கு என்னை பார்க்க காத்திருக்கும் இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர் என்று கூறியிருந்தார்.
ஆனால் இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் மேடையில் இளையராஜாவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளார். கோடம்பாக்கம் பாலத்தின் மேல் நின்று இளையராஜாவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் மனோபாலாவுக்கு கிடையாது.
அவர் ஏற்கனவே பத்திரிக்கையாளராக இருந்து பின் இயக்குனர் பாரதிராஜாவிடம் அசிஸ்டண்ட் ஆக இருந்து வந்தார். அந்தபின் சொந்தமாக இயக்குனாராக பல படங்களை இயக்கினார். அப்படி இளையராஜா காருக்காக பல மணி நேரம் பாலத்தின் மேல் மனோபாலா நின்று நேரத்தை வீணடிக்க மாட்டார்.
அவர் எல்லோரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் பழக்கூடியவர் என்றூம் காலமாற்றத்தால் தன்னை நடிகராக உயர்த்திக் கொண்டவர் என்று கே ராஜன் தெரிவித்திருக்கிறார். இப்படியொரு சமயத்தில் ஏன் இளையராஜாவின் வாயில் இது வரலாமா என்று கே ராஜன் விமர்சித்துள்ளார்.