ஆணவத்தில் இப்படியா இரங்கல் தெரிவிக்குறது!! இளையராஜா வீடியோவால் கண்டபடி திட்டும் நெட்டிசன்கள்..

Ilayaraaja Manobala
By Edward May 04, 2023 05:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் இசைஞானியாக திகழ்ந்து வரும் இளையராஜா, பல ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து ரசிக்க வைத்து வருகிறார். புகழின் உச்சிக்கே சென்ற இளையராஜா சிலரின் பகையாலும் ஆணவத்தில் நடந்து கொண்ட பேச்சாலும் வெறுப்பையும் சம்பாதித்து வந்துள்ளார்.

இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா மரணத்திற்கு பல நட்சத்திரங்கள் இரங்கல் செய்திகளை பகிர்ந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வந்தனர்.

இளையராஜாவும் தன் பங்கிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றினை பகிர்ந்தார். அதில், இரங்கல் தெரிவித்த இளையராஜா, எல்லா காலத்திலும் என்னை சந்தித்து வருபவர் மனோபாலா.

கோடம்பாக்கம் மேம்பாலத்தை என் கார் தாண்டும் நேரத்தில் அங்கு என்னை பார்க்க காத்திருக்கும் இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர் என்று கூறியிருந்தார்.

இதனை வைத்து நெட்டிசன்கள் இப்போது ஆணவம் குறையவில்லை, இதெல்லாம் தேவையில்லாத பேச்சு என்றும் கலாய்த்தபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.