இசைஞானிக்கு என்ன ஆனது! இளையராஜா இப்படி பாட இதுதான் காரணமாம்?

newyear Ilaiyaraaja isaignani newyear2022 sakalakalavallavan ilamaiithoitho
By Edward Dec 31, 2021 05:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. வரும் புத்தாண்டு 2022க்கு வாழ்த்து கூறும் வகையில் சகலகலா வல்லன் படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ பாடலை காரில் சென்றபடியே பாடி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இதற்கு காரணம் சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் இளையராஜா உடல்நலக்குறைவால் அனுமதித்துள்ளதாக செய்திகள் பரவி வைரலானது. இந்த செய்தி முதலில் மலேசியாவில் தான் ஆரம்பித்ததாம். இதுகுறித்து பலர் முகம் கூசும் படியான வீடியோக்களை பகிர்ந்ததாகவும் செய்திகள் வெளியானதாம்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இளையராஜா புத்தாண்டிற்கு முன்பே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 

இதற்கு நடிகர் கமல்ஹாசன், இளையராஜாவை 3 நாட்களுக்கு முன் சந்தித்தேன். இளமை மாறாட ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார் என கூறியதோடு மனதளவில் அந்த வீடியோ பார்த்து வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.