அசிங்கப்படுத்திய பாடகியை ஆணவத்தில் கிட்ட நெருங்கவிடாத இளையராஜா..கையேந்தவிட்ட இசைஞானி

Ilayaraaja
By Edward May 09, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் இசைஞானி என்று பலரால் அறியப்பட்டு புகழின் உச்சிக்கே சென்றவர் இளையாராஜா. ஞானதேசிகன் என்ற பெயரோடு சென்னைக்கு வந்த இளையராஜா தம்பி உள்ளிட்ட சிலருடன் தெருக்கச்சேரி நடத்தி வந்துள்ளார்.

பின் டப்பிங்கில் பாடும் வாய்ப்பு கிடைக்க, அதன் பி. குமாரின் இசைக்குழுவில் கிட்டார் வாசிப்பாளராக பணியாற்றினார். அதன் பின் பாடகர்களுக்கு நோட் எழுதி கொடுக்கும் வேலையை அங்கே செய்து வந்துள்ளார்.

அப்போதைய பிரபல பாடகி சுசிலா பாடவேண்டிய பாட்டின் நோட்ஸ்-ஐ இளையராஜா எழுதி கொடுக்க, எனக்கு இது பாடலுக்கு பொருந்தவில்லை என்று வெளிப்படையாக கூறி அசிங்கப்படுத்தியுள்ளார்.

இதற்கு இளையராஜா கவனத்தை எங்கு வைத்து பாடினீங்களோ என்று கேட்ட இதனால் கோபமடைந்துள்ளார் சுசிலா. மேலும் இவரை பார்த்தால் எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது அவரை வெளியே போகச்சொன்னால் தான் நான் பாடுவேண் என்று தலைக்கனத்தில் பேசியிருக்கிறார்.

வேறுவழியின்றி வெளியேறி இசையமைப்பாளர் ஜி. கே. வெங்கடேஷ் குழுவில் இணைந்திருக்கிறார் இளையராஜா. அங்கு கிடைத்த வாய்ப்பு தான் பஞ்சு அருணாச்சலத்திடம் அரிமுகப்படுத்தியது. இதன்மூலம் தன்னுடைய கம்போசிங்கை கொண்டு அன்னக்கிளி படத்தின் வாய்ப்பை தட்டினார்.

படத்தில் அனைத்து பாடல்களையும் சுசிலாவிடமே கொடுக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கேட்டுள்ளாராம். ஆனால், சுசிலாவை என்னால் எல்லாத்திலும் பாடவைக்க முடியாது என்று கூறி ஒரேஒரு பாடலுக்கு மட்டும் பாடவைத்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து சுசிலா இளையராஜாவின் வளர்ச்சியை கண்டு அவரிடம் மன்னிப்பும் கேட்டு வாய்ப்பினை பெற்றுள்ளாராம். ஒருவரின் உடலை வைத்து எந்த மதிப்பு போடக்கூடாது என்பதற்கு உதாரணம் இளையராஜா திகழ்ந்துள்ளார்.