இளையராஜாவுக்கு என்ன ஆச்சு? அடையாளம் தெரியாமல் மாறிப்போன முகம்..
இசையின் இசைஞானியாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை கொடுத்தும் பல ஆயிரம் கச்சேரிகளை நடத்தி மக்கள் மனதை ஈர்த்து வந்த இளையராஜா பல வருடங்களுக்கு பிறகு அவரே நடத்தும் இசை கச்சேரியை இன்று மதுரையில் நடத்தவுள்ளார்.
முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ள இந்த கச்சேரியில் வைகைபுயல் வடிவேலு பங்கேற்கவுள்ளார். சமீபத்தில் இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளார் வடிவேலு. தன்னை முதன் முதலில் சினிமாவில் பாடவைத்தவர் இளையராஜா என்று சமீபத்தில் கூட இசைஞானியின் பிறந்த நாளுக்கு வாழ்த்தும் கூறியிருந்தார் வடிவேலு.
அவர்கள் எடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அப்படி முகம் வீக்கத்துடன் காணப்பட்ட இளையராஜா அடையாளமே தெரியாமல் மாறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இதனை பலர் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.