தலைக்கனத்தில் நண்பன் இறப்புக்கு கூட தாமதமாக வந்த இளையராஜா!! கோபத்தில் அசிங்கப்படுத்தி போகசொன்ன வாரிசு
தமிழ் சினிமாவின் இசைஞானியாக திகழ்ந்து தனக்கு யாரும் ஈடு இணையில்லை என்று கூறும் அளவிற்கு இசைக்கடவுளாக போற்றப்பட்டு வருபவர் இளையராஜா. அவர் எவ்வளவு உச்சத்திற்கு இருக்கிறாரோ, அதற்கு இணையாக பல வெறுப்புகளையும் தன் ஆணவம் மற்றும் கர்வத்தால் அதிகமாக விமர்சனத்தையும் சந்தித்து இருக்கிறார்.
அப்படி தன் நெருங்கிய நண்பர்களை கூட இளையராஜா பகைத்துக்கொண்டார். அப்படி இளையராஜாவின் நெருங்கிய நண்பராக திகழ்ந்து வந்தவர் மலேசியா வாசுதேவன். அவர் இந்த அளவிற்கு இடத்தினை பிடிக்க இளையராஜாவும் ஒரு காரணம் என்பதால் மரியாதையுடன் இருந்தார். மலேசியா வாசுதேவன் கடைக்காலத்தில் வாய்ப்பிகள் இல்லாமல் இருக்கும் போது நண்பர்கள் உதவியில்லாமல் கஷ்டப்பட்டுள்ளே என்று பேட்டிகளில் கூட பகிர்ந்திருந்தார்.
அப்படி இறக்கும் தருவாயில் 10 நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் போது இளையராஜாவை சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை இளையராஜாவிடம் குடும்பத்தினர் கூறியும் நண்பரை சந்திக்காமல் இருந்துள்ளார் இளையராஜா. திரும்ப வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் காலம் தாழ்த்திய இளையராஜா கடைசி நிமிடம் வரை வருவார் என்று மலேசியா வாசுதேவனுக்கு ஏமாற்றமாக தான் முடிந்திருக்கிறது.
உயிர் போகும் அந்த நாளில் இளையராஜா பதறியடித்து ஓடி வந்த போது அதற்கு முன்பே மலேசியா வாசுதேவன் மரணமடைந்தார். அவர் வந்ததை பார்த்த மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன், எதற்காக வந்தீர்கள், என் அப்பா இறந்துவிட்டார், கடைசி ஆசையை கூட அவருக்கு நிறைவேற்றவில்லை நிங்கள் என்று கூறியதோடு இங்கே இருந்து போய்விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அந்த குற்ற உணர்ச்சியோடு மலேசியா வாசுதேவனின் இறுதி சடங்கு முடியும் வரை எல்லா காரியத்தையும் பார்த்திருக்கிறார். உங்கள் குடும்பத்திற்கு என்னாலான உதவியை செய்கிறேன் என்று இளையராஜா கூறியதற்கு உங்கள் உதவி எனக்கு தேவையில்லை என்று மகன் யுகேந்திரன் மறுத்திருக்கிருக்கிறார்.