12 வயதில் அப்படியொரு நோய்! உடல் அளவில் கேலிகளை சந்தித்த இலியானா..

vijay nanban ileana tamilactress kedi bollywoodactress
By Edward Jan 03, 2022 03:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கேடி என்ற சிறு பட்ஜெட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் நடிகர் விஜய்யின் நண்பன் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை இலியானா. சமீபகாலமாக க்ளாமர் ஆடையில் சமுகவலைத்தளத்தில் வலம் வரும் இலியானா 2022 ஆண்டு துவக்கத்தில் தான் முன்பு பட்ட கஷ்டங்களை இணையத்தில் கூறி வந்தார்.

அதில் தன்னுடைய 12 வயதில் உடல் எடை குறைவாக காணப்பட்டேன். ஆனால் உடலின் முக்கிய அங்கங்களை பார்த்து சிலர் என்னை கேலி செய்து வந்தார்கள். அதிலிருந்து வெளிவர மருத்துவர்கள் உதவிகளை நாடி தன்னம்பிக்கையை வளர்ந்துக்கொண்டேன்.

தற்போது என் உடல் அழகாகவும் எனக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இப்படியான உருவ கேலி செய்பவர்களை கண்டுகொள்ளாமல் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த நேரம் கூட என் புகைப்படத்தை பார்த்து 10 மெசேஜ்கள் உடல் கேலி செய்ததாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் இலியானா.