முன்னாள் மனைவி செய்த காரியத்தால் கொதித்துப்போன இமான்! நீதிமன்றமே ஷாக்
இசையமைப்பாளர் இமான் தற்போது தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர். அவர் சமீபத்தில் அவரது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
மேலும் இமான் விரைவில் இரண்டாம் திருமணம் செய்யப்போவதாகவும் செய்தி பரவி வருகிறது. வருகின்ற பெண் தன் குழந்தைகளையும் பார்த்து கொள்ள வேண்டும் என இமான் கண்டிஷன் போட்டிருப்பதாக செய்தி வெளியானது.
இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் இமான் தன் முன்னாள் மனைவி பற்றி ஒரு புகார் அளித்து இருக்கிறார். குழந்தைகளை பார்க்க தனக்கு அனுமதி இருக்கும் நிலையில் அவர்களை வெளிநாடு அனுப்ப திட்டமிட்டு வருகிறார் என குற்றம் சாட்டி இருக்கிறார்.
குழந்தைகள் பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கும் நிலையில் அது தொலைந்துவிட்டதாக கூறி பாஸ்போர்ட் அலுவலகத்தில் அவர் பொய்யான தகவல் கொடுத்து புது பாஸ்போர்ட் வாங்கி இருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மோனிகா மற்றும் பாஸ்போர்ட் அதிகாரி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறது.