இமான் பத்தி பேசுனா சிவகார்த்திகேயன் மாட்டிப்பாரு, சட்டையை புடிச்சி கேக்கலாம்!! பிரபலம் ஓபன் டாக்
நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு மிக பெரிய துரோகம் செய்துவிட்டார் என்று இசையமைப்பாளர் இமான் ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டது.
தற்போது வரை இமான் பேச்சுக்கு சிவகார்த்திகேயன் தரப்பினர் விளக்கம் கொடுக்கவில்லை.
சமீபத்தில் அவர் கலந்துகொண்ட பேட்டிகளிலும் கூட இமான் பற்றி பேசவில்லை, தன் மீது எழுந்த குற்றச்சாற்றுக்கு விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில் பிரபல சினிமா அந்தணன் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், "தன் மீது குற்றச்சாற்று வைத்தும் இதை பற்றி சிவகார்த்திகேயன் பேசாமல் இருக்க காரணம், அவர் இமான் பேச்சை இழுத்தாலே மாட்டிக்கொள்வார் என்பது தான். நியாயம் இருந்தால் தவறாக பேசியவரை சட்டையை பிடித்து கேக்கலாம். ஆனால் தன் பக்கம் நியாயம் இல்லாத காரணத்தால் எதையாவது பேசி முழுக வேண்டியது தான்" என்றுஅந்தணன் கூறியுள்ளார்.