சிவகார்த்திகேயன் மேல என்ன தப்பு இருக்கு, நாங்க இரண்டு பெரும் பிரிய கூடாது நினைச்சோம்..இமான் மனைவி பகிர் பேட்டி

Sivakarthikeyan Tamil Cinema D Imman D. Imman
By Dhiviyarajan Oct 17, 2023 12:25 PM GMT
Report

இமான் சிவகார்த்திகேயன் இடையே இருக்கும் பிரச்சனை தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இமான், இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு செய்தது மிக பெரிய துரோகம்.

அதை என்னால் வெளியே சொல்லக்கூட முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

சிவகார்த்திகேயன் மேல என்ன தப்பு இருக்கு, நாங்க இரண்டு பெரும் பிரிய கூடாது நினைச்சோம்..இமான் மனைவி பகிர் பேட்டி | Imman Wife Relationship Between Sivakarthikeyan

இந்நிலையில் பேட்டி கலந்துகொண்டு இமான் முதல் மனைவி இது தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், சிவகார்த்திகேயன் எங்கள் குடும்ப நண்பர். நானும் இமானும் பிரிய கூடாது என்று நினைத்தார்.

எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு தான் சமாதானம் பேசி பஞ்சாயத்துப் பண்ணி வைத்தார் சிவகார்த்திகேயன். இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணல. அவர் நியாயத்தின் பக்கத்தில் நின்றார். சிவகார்த்திகேயன் மேல எந்த தவறும் இல்லை என்று இமானின் முதல்மனைவி மோனிகா பேசியுள்ளார். 

சிவகார்த்திகேயன் மேல என்ன தப்பு இருக்கு, நாங்க இரண்டு பெரும் பிரிய கூடாது நினைச்சோம்..இமான் மனைவி பகிர் பேட்டி | Imman Wife Relationship Between Sivakarthikeyan