கறிக்குழம்பு சாப்பிட்டது ஒரு குத்தமாயா...வயதானவருக்கு நேர்ந்த சோகம்!!
Old man
By Jeeva
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தான் இந்த சோக நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.
கட்டிட தொழிலாளியான சுப்பிரமணியம் தனது வீட்டில் சமைத்துவைத்திருந்த கோழிக்கறி குழம்பினை ஆசை ஆசையாக சாப்பிட்டுள்ளார்.
உண்ணும்போது கறியிலுள்ள எலும்பு துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார்.
இதனை அடுத்து அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஊர் மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஆக கோழிக்கறி பிரியர்களே உஷார்...!!!