6 வருஷமா வாய்ப்பே இல்ல!! ஒரே படத்துக்கு 30 கோடி சம்பளம் வாங்கிய விஜய் பட நடிகை..
இந்திய சினிமாவில் மார்க்கெட்டே இல்லாத நடிகைகள் திடீரென ஒரு படத்தில் நடித்து மிகப்பெரிய சம்பளத்தில் கமிட்டாகி உச்சத்தை எட்டுவார்கள். அப்படி இந்தியாவில் ஒரு நடிகை தனது புதிய படத்திற்காக 30 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
அதுவும் 6 ஆண்டுகளாக வாய்ப்பே இல்லாமல் இருந்தநிலையில் இத்தனை கோடி சம்பளமாக பெற்றுள்ளது திரையுலகத்தையே அதிர வைத்திருக்கிறது.
பிரியங்கா சோப்ரா
அந்த நடிகை வேறுயாரும் இல்லை நடிகை பிரியங்கா சோப்ரா தான். 2000 ஆம் ஆண்டு மிஸ் வேல்ட் பட்டம் வென்று நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பல கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியாக மாறியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. பல விருதுகளை பெற்றுள்ள பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார்.
பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த 2019 தி ஸ்கை ஈஸ் பிங்க் என்ற படத்தில் பர்ஹான் அக்தருடன் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் எந்த படத்திலும் கமிட்டாகாத பிரியங்கா, 6 ஆண்டுகளுக்கு பின் இந்தி படம் ஒன்றுக்கு கமிட்டாகியுள்ளார்.
Rs. 30 கோடி சம்பளம்
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் SSMB29 என அழைக்கப்படும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காகத்தான் பிரியங்கா சோப்ராவிற்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற சாதனையை இதன்மூலம் பிரியங்கா பிடித்துள்ளார். இந்தியில் படவாய்ப்பு இல்லாவிட்டாலும், ஆங்கில மொழிப்படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வந்துள்ளார் பிரியங்கா.
நடிகைகளை பொறுத்தவரை அதிக சம்பளமாக கல்கி 2898ஏடி படத்திற்காக தீபிகா படுகோனே 20 கோடி ரூபாய் சம்பளம் பெற்றது அதிகமாக இருந்தது. தற்போது தீபிகாவை ஓரங்கட்டியுள்ளார். ஆனால் இதற்கு முன் அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சியான சிட்டாடலுக்குக்காக 41 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெற்றிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.