கற்பூரத்தால் வந்த பிரச்சனை.. இந்தியன் 2 தியேட்டரில் பரபரப்பு

Indian 2
By Parthiban.A Jul 12, 2024 10:54 AM GMT
Report

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து இருக்கும் இந்தியன் 2 படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியாகி இருக்கும் நிலையில் கலவையான விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கிறது.

படம் பார்க்க சென்று கமல் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். பேனருக்கு பாலபிஷேகம், பட்டாசு என கொண்டாடி தள்ளி இருக்கின்றனர்.

கற்பூரத்தால் வந்த பிரச்சனை.. இந்தியன் 2 தியேட்டரில் பரபரப்பு | Indian 2 Theater Fire Incident With Camphor

கற்பூரம்

புதுச்சேரியில் கமல் ரசிகர்கள் சிலர் இந்தியன் 2 பேனர் முன்பு 5 கிலோ கற்பூரத்தை கொளுத்தி இருக்கின்றனர்.

கொழுந்து விட்டு எரிந்த தீ அருகில் இருக்கும் பேனர் மீதும் பரவும் வகையில் சென்றது, அதனால் அங்கிருந்த போலீஸ் கற்பூரத்தை கீழே தள்ளி தண்ணீர் ஊற்றி அணைத்து இருக்கின்றனர்.