திருமணம், குழந்தை, வயது.. நடிகை தமன்னாவின் பேச்சால் ரசிகர்கள் ஷாக்!

Tamannaah Tamil Cinema Actress
By Bhavya Oct 29, 2025 09:30 AM GMT
Report

தமன்னா

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் Do You Wanna Partner என்ற வெப் தொடர் வெளிவந்தது.

ஆனால், இந்த வெப் தொடருக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தமன்னா நடிப்பில் அடுத்ததாக ரோமியோ, ரேஞ்சர், Vvan, ரோஹித் ஷெட்டியின் படம் என நான்கு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இவை அனைத்துமே ஹிந்தி திரைப்படங்கள். இந்நிலையில், வயது குறித்து தமன்னா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம், குழந்தை, வயது.. நடிகை தமன்னாவின் பேச்சால் ரசிகர்கள் ஷாக்! | Tamannaah Open About Age Is Not A Matter

ரசிகர்கள் ஷாக்! 

அதில், " 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சினிமா தற்போது இல்லை. 30 வயது வரை நடிப்பேன், பின் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெறுவேன் என்று நினைத்தேன்.

வயது அதிகரிப்பதை ஏதோ ஒரு நோய் போலப் பேசுகிறார்கள். வயது அதிகரிப்பது மிகவும் அற்புதமான விஷயம். ஆனால் மக்கள் வயதாவதை கண்டு பயப்படுகிறார்கள். அது ஏன் என்று தான் எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.  

திருமணம், குழந்தை, வயது.. நடிகை தமன்னாவின் பேச்சால் ரசிகர்கள் ஷாக்! | Tamannaah Open About Age Is Not A Matter