28 வருடங்களாக தியேட்டரில் மாஸ் செய்த படம்.. சரத்குமாரின் வைரல் பேச்சு!

Sarathkumar Tamil Cinema Tamil Actors
By Bhavya Oct 29, 2025 06:30 AM GMT
Report

சரத்குமார்

தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர்களில் ஒருவர் சரத்குமார். இவர் தனது திரை வாழ்க்கையில் இதுவரை 150 படத்திற்கும் மேல் நடித்துள்ளார்.

சூர்யன், நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக, ஐயா, சமுத்திரம் என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 3BHK திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

28 வருடங்களாக தியேட்டரில் மாஸ் செய்த படம்.. சரத்குமாரின் வைரல் பேச்சு! | Sarathkumar Open Talk About His Best Movie

வைரல் பேச்சு! 

இந்நிலையில், சரத்குமாரின் சூர்யவம்சம் படம் குறித்து அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " சூர்ய வம்சம் ரிலீஸின் போது நான், விக்ரமன் சார், செளத்ரி எல்லாம் திரையரங்கு வெளியில் ரிவ்யூ கேட்பதற்காக நின்று கொண்டு இருந்தோம். அப்போது ஒரு இயக்குநர் எங்களை அழைத்து சென்று என்ன படம் எடுத்திருக்கிறீர்கள்.

எப்படி இந்த படம் ஓடும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம். அனைவரும் படம் நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள்.

ஆனால், இவர் இப்படி சொல்லிட்டாரே என்று தோன்றியது. சில நேரம் நம் பார்வையை விட ஆடியன்ஸ் பார்வை மிகவும் முக்கியம். அந்த விதத்தில் இன்று வரை அதிக ஆடியன்ஸ் பார்த்த திரைப்படம் என்றால் அது ’சூர்யவம்சம்’ திரைப்படம் தான்" என்று தெரிவித்துள்ளார்.     

28 வருடங்களாக தியேட்டரில் மாஸ் செய்த படம்.. சரத்குமாரின் வைரல் பேச்சு! | Sarathkumar Open Talk About His Best Movie