மகன் தனுஷ் திருமணம் இருக்கட்டும்!! நெப்போலியன் திருமணத்தில் மணப்பெண் செய்த செயல்..

Napoleon Actors Marriage Tamil Actors
By Edward Jul 16, 2024 04:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் நெப்போலியன். இவர், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். மகனின் சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற நெப்போலியன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

மகன் தனுஷ் திருமணம் இருக்கட்டும்!! நெப்போலியன் திருமணத்தில் மணப்பெண் செய்த செயல்.. | Interesting Fact Happened In Nepoleans Marriage

இந்நிலையில் நெப்போலியன் தனது மகன் திருமணத்துக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். தனுஷை திருமணம் செய்யப்போகும் பெண் நெல்லையை சேர்ந்தவர், மணமகள் வீட்டுக்கு வந்து மணமகன் தாலி கட்ட வேண்டும். ஆனால், தனுஷின் உடல்நிலை சரியில்லாததாலும் திருமணத்தை ஜப்பானின் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் யூடியூபர் இர்ஃபானை சந்தித்து பத்திரிக்கை கொடுக்கும் போது ஜப்பானில் திருமணம் என்று கூறி அழைத்திருக்கிறார். மகன் தனுஷ் திருமணம் ஒரு பக்க இருக்கையில் நெப்போலியன் திருமணத்தில் நடந்த ஒரு சலசலப்பான விஷயம் இணையத்தில் கசிந்துள்ளது.

அம்பானி மூத்த மகனுக்கும் அம்மா நீதாவுக்கு என்ன பிரச்சனை!! வைரலாகும் ஆகாஷ் அம்பானி வீடியோ..

அம்பானி மூத்த மகனுக்கும் அம்மா நீதாவுக்கு என்ன பிரச்சனை!! வைரலாகும் ஆகாஷ் அம்பானி வீடியோ..

சில ஆண்டுகளுக்கு முன் நெப்போலியன் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் ஓரளவிற்கு வளர்ந்ததும் என் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்படி என் மனைவி கல்லூரி படிக்கும் போது அவரது ஜாதகத்தையும் என் ஜாதகத்தையும் 9 பொருத்தம் எப்படி என்று பார்த்தார்கள். அப்படி பார்க்கையில் 9 பொருத்தம் வந்தது.

மகன் தனுஷ் திருமணம் இருக்கட்டும்!! நெப்போலியன் திருமணத்தில் மணப்பெண் செய்த செயல்.. | Interesting Fact Happened In Nepoleans Marriage

பெண் பார்க்க வீட்டிற்கு சென்ற போது என் மனைவி யார் மாப்பிள்ளை என கேட்டார். அதற்கு என்னை காட்டிய உறவினர்கள், இவர்தாம்மா, இருவர் நடிகர் நெப்போலியன் என்று கூறியதும் இவரை நான் திருமணம் செய்துக்கொள்ள முடியாது. இவர் எனக்கு வேண்டாம் என்று சொன்னார்.

ஏன் என்று கேட்டதற்கு இவர் எஜமான் படத்தில் வயிற்றில் உள்ள கருவையே கலைக்கும் அளவுக்கு கொடுமைக்காரர், இவருடன் எப்படி குடும்பம் நடத்துவது என்று கேட்டார். அதெல்லாம் சினிமா, நிஜத்தில் நல்லவர், விசாரிக்காமல் பெண் கொடுப்பேனா? என்று என் மாமனார் சமாதானம் செய்து திருமணத்திற்கு என் மனைவியை சம்மதிக்க வைத்தனர் என்று நெப்போலியன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

You May Like This Video