நடிகைகளின் வீடியோக்களை தேடி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ரியான் பராக்!! லீக்காகும் புகைப்படங்கள்..
ஐபிஎல் 2024 போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்து கல்கத்தா அணி கோப்பையை தட்டிச்சென்றது. இந்த சீசனில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தனர். அதில் ஒருவராக ராஜஸ்தான் அணியின் வீரர் ரியான் பராக் இருந்துள்ளார்.
சிறப்பாக விளையாடி ரியான் பராக் இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் போட்டியில் ரியான் பராகை தேர்வு செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்தது. இந்நிலையில் இளம் வீரர் ரியான் பராக் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். யூடியூபில் கேம் விளையாடியதை நேரலை செய்ததிருக்கிறார்.
அப்போது சில பதிப்புரிமை இசையை யூடியூபில் தேடிய போது ரியான் பராகின் தேடல் ஹிஸ்ட்ரியில் பாலிவுட் நடிகைகளான அனன்யா பாண்டே ஹாட், சாரா அலி கான் ஹாட் என்று வெளிப்படையாகவே லைவ் வீடியோவில் தெரிந்துள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ரியான் பராக் தேடல் தொடர்புடைய ஸ்க்ரீன்ஷாட்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து டிரெண்ட்டாக்கி உள்ளனர். நேற்றில் இருந்து தற்போது வரை ரியான் பராக் டிரெண்ட்டிங் ஆனதை நெட்டிசன்கள் கலாய்த்தபடியும் விமர்சித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கிரிக்கெட் வீரர்களுக்கு சுய ஒழுக்கம் தேவை என்று ரசிகர்களும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
