CSK vs MI : சேப்பாக்கத்தில் அனுரூத் இசை..

MS Dhoni Ruturaj Gaikwad Chennai Super Kings Mumbai Indians IPL 2025
By Edward Mar 22, 2025 04:30 AM GMT
Report

IPL 2025

சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் தற்போது ஐபிஎல் திருவிழா சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வரும் சனிக்கிழமை 22 ஆம் தேதி IPL 2025 சீசன் 18 பிரம்மாண்ட முறையில் துவங்கவிருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கே கே ஆர் அணியுடன் ஆர்சிபி அணி கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளது. ஐபிஎல் துவக்க விழாவில் பல பிரபலங்களின் பர்ஃபார்மன்ஸ் நடைபெறும்.

CSK vs MI : சேப்பாக்கத்தில் அனுரூத் இசை.. | Ipl 2025 Csk Mi Match Anirudh Performence

கோலாகலமாக துவங்கவுள்ள, இந்நிகழ்ச்சியில் ஜோடியான ஷர்தா கபூர் - வருண் தவான் நடனமாட இருக்கிறார்கள். அதேபோல், பிரபல பாப் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், பஞ்சாப் பாப் பாடகர் கரண் அஜ்லர், பிரபல பின்னணி பாடகர் அரிஜித் சிங் உள்ளிட்டவர்கள் பாடல்கள் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் இருக்கிறார்.

CSK vs MI

இந்நிலையில் மூன்றாவது ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நாளை மார்ச் 23 ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு நடக்கவுள்ளது.

CSK vs MI : சேப்பாக்கத்தில் அனுரூத் இசை.. | Ipl 2025 Csk Mi Match Anirudh Performence

இப்போட்டி நடப்பதற்கு முன் மாலை 6.30 மணி முதல் 6.50 மணி வரை சேப்பாக்கம் மைதானத்தில் இசையமைப்பாளர் அனிரூத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம். இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள்.