சல்மான் கான் முதல் பிரியங்கா சோப்ராவை!! IPL 2025 தொடக்க விழாவிற்க்கு வரப்போகும் நட்சத்திரங்கள்..
IPL 2025 சீசன் 18
சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் தற்போது ஐபிஎல் திருவிழா சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வரும் சனிக்கிழமை 22 ஆம் தேதி IPL 2025 சீசன் 18 பிரம்மாண்ட முறையில் துவங்கவிருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கே கே ஆர் அணியுடன் ஆர்சிபி அணி கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளது.
ஐபிஎல் துவக்க விழாவில் பல பிரபலங்களின் பர்ஃபார்மன்ஸ் நடைபெறும். கோலாகலமாக துவங்கவுள்ள, இந்நிகழ்ச்சியில் ஜோடியான ஷர்தா கபூர் - வருண் தவான் நடனமாட இருக்கிறார்கள்.
அதேபோல், பிரபல பாப் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், பஞ்சாப் பாப் பாடகர் கரண் அஜ்லர், பிரபல பின்னணி பாடகர் அரிஜித் சிங் உள்ளிட்டவர்கள் பாடல்கள் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் இருக்கிறார்.
நட்சத்திரங்கள்
இந்நிலையில் ஐபிஎல் துவக்க விழாவிற்கு கேகேஆர் உரிமையாளர் ஷாருக்கான், அவர் தரப்பில் இந்தி சினிமா பிரபலங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அந்தவகையில், சல்மான் கான், விக்கி கவுசல், சஞ்சய் தத், கேத்ரினா கைஃப், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் தொடக்கவிழாவில் கலந்து கொள்வார்களாம்.
மேலும் சல்மான் கான், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து மார்ச் 30 ஆம் தேதி ரீலீஸாகவுள்ள சிக்கந்தர் படத்தின் விளம்பரத்திற்காக ஐபிஎல் 2025 துவக்க விழாவை பயன்படுத்தவுள்ளாராம்.