IPL 2025 : ஐபிஎல் அணி உரிமையாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Chennai Super Kings Mumbai Indians TATA IPL Nita Ambani IPL 2025
By Edward Mar 26, 2025 02:30 AM GMT
Report

IPL 2025

கிரிக்கெட்டில் ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடரை விட அதிகளவில் மக்கள் மத்தியில் கவர்ந்து வரும் தொடர் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் தான்.

IPL 2025 : ஐபிஎல் அணி உரிமையாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Ipl 2025 Owners And Their Networth List Viral

கடந்த 2008ல் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் தற்போது 18வது சீசனை துவங்கியுள்ளது. 10 அணிகளுக்கும் தனித்தனி உரிமையாளர்கள் இருக்கிறார்கள்.

பல கோடிகளை வைத்து அணியின் வீரர்களை எடுக்கும் உரிமையாளர்களின் மொத்த சொத்து எவ்வளவு இருக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

IPL 2025 : ஐபிஎல் அணி உரிமையாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Ipl 2025 Owners And Their Networth List Viral

உரிமையாளர்களின் சொத்து மதிப்பு

  1. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் மனோஜ் படேல், சுமார் 160 பில்லியன் டாலர் சொத்து வைத்துள்ளார். 17 சீசன்களில் ராஜஸ்தான் அணி முதல் சீசனில் மட்டும் கோப்பையை வென்றுள்ளது.
  2. டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் கிரண் குமார் காந்தியின் சொத்து மதிப்பு சுமார் 23 பில்லியன் டாலர். இதுவரை இந்த அணி கோப்பையை வென்றதில்லை.
  3. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசனின் சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலராகும். இதுவரை 5 கோப்பையை வென்றுள்ளது சிஎஸ்கே அணி.
  4. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் சொத்து மதிப்பு 165 பில்லியன் டாலர்.
  5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு 766 மில்லியன் டாலர். இதுவரை 3 கோப்பையை வென்றுள்ளது.
  6. ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணியின் உரிமையாளரான ஆனந்த் கிருபாலுவின் சொத்து 1.1 பில்லியன் டாலராகும். இதுவரை ஒரு கோப்பையும் வென்றதில்லை ஆர்சிபி அணி.
  7. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலராகும். 2016ல் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது எஸ் ஆர் எச் அணி.
  8. லக்னோ சூப்பர் ஜெண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சொத்து மதிப்பு 4.3 பில்லியன் டாலராகும்.
  9. குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளர் சித்தார்த் படேலின் சொத்து மதிப்பு 110 பில்லியன் டாலராகும். அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை கைப்பற்றியது குஜராத் அணி.
  10. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 155 பில்லியன் டாலராகும். மும்பை அணி இதுவரை 5 கோப்பையை வென்றுள்ளது.