ஐபிஎல் 2025 தொடர் ஒத்திவைப்பு!! RCB அணியை கலாய்த்து தள்ளும் CSK, MI ரசிகர்கள்..

Chennai Super Kings Royal Challengers Bangalore Tamil Memes IPL 2025
By Edward May 09, 2025 10:30 AM GMT
Report

ஐபிஎல் 2025

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர் பதற்றம் காரணமா இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பிலும் சில நாட்களாகவே ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடந்து வருகிறது.

ஐபிஎல் 2025 தொடர் ஒத்திவைப்பு!! RCB அணியை கலாய்த்து தள்ளும் CSK, MI ரசிகர்கள்.. | Ipl 2025 Suspended Csk Mi Fans Trolls Rcb Memes

நமது எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி வரும் நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இருக்கும் தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான பங்காப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நிறுத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை ஏற்படாக அப்போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு ரசிகர்களையும் வீரர்களை பத்திரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா அல்லது நிறுத்தப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியை ஏற்படுத்தி வந்தது.

ஐபிஎல் 2025 தொடர் ஒத்திவைப்பு!! RCB அணியை கலாய்த்து தள்ளும் CSK, MI ரசிகர்கள்.. | Ipl 2025 Suspended Csk Mi Fans Trolls Rcb Memes

இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா முன்னிலையில் நடந்த கூட்டத்தில் ஐபிஎல் போட்டி ஒத்து வைப்பதாக அறிவித்தனர். இதுகுறித்து மீண்டும் எப்போது ஐபிஎல் 2025 போட்டிகள் நடக்கும் என்று கேள்வி கேட்டு வந்த நிலையில், வெறும் ஒரு வாரம் மட்டுமே தள்ளி வைத்துள்ளதாக இந்தியன் ப்ரீமியர் லீக் குழு எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

RCB மீம்ஸ்கள்

தற்போது ஆர்சிபி அணியின் ரசிகர்களை சென்னை மற்றும் மும்பை ரசிகர்கள் கலாய்த்தபடி மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி இருந்தாலும் ஒரு வாரத்தில் ஐபிஎல் போட்டி ஆரம்பிச்சும் என்று ஆர்சிபி ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery