ஐபிஎல் ஏலமும் புரளும் கோடிகளும்! நாட்டுக்கு இது தேவையா?

csk ipl MI IPLAuction2022 ishankishan
By Edward Feb 14, 2022 10:50 AM GMT
Report

இந்தியளவில் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பாக நடத்தப்பட்டு வரும் போட்டி ஐபிஎல். இந்த ஆண்டு 15 வது ஐபிஎல் போட்டி இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளது. ஏற்கனவே குறித்த போட்டியாளர்களை அந்தந்த அணியினர் தக்கவைத்து மீதமுள்ளவர்களை விலக்கியது.

அதன் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் முக்கிய வீரர்கள் கூட ஏலம் எடுக்காமல் போனதுதான் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. சுரேஷ் ரெய்னா, ஏபி டிவில்லையர்ஸ், கிர்ஸ் கெய்ல் உள்ளிட்ட ஐபிஎல் ஜாம்பவான்களை எந்த அணியும் எடுக்கவில்லை.

இந்த ஆண்டு அறிமுகமாகும் இரு அணிகள் கூட அவர்களை எடுக்காமல் போனது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல்-லில் அதிகமான தொகைக்கு எடுக்கப்பட்டவர் இஷான் கிஷ்ன். ரூ. 15.25 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளனர்.

அவரை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் வீரர் தீபக் சாஹரை 14 கோடிக்கும் ஏலம் எடுத்து தக்கவைத்தது. இப்படி கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் போட்டியில் சுமாரான ஆட்டத்தை கொடுப்பது தான் ஏமாற்றத்தை கொடுக்கும்.

அப்படி ஐபிஎல் ஏலத்தினையும் கோடியில் வீரர்களை புரள வைப்பதை எதிர்த்து பலர் விமர்சித்து வருகிறார்கள். இந்த போட்டிக்காக 562 கோடி ரூபாய்களை வீரர்களுக்காக 10 உரிமையாளர்கள் பணத்தை வாரி வழங்கியுள்ளார்களாம். 108 வீரர்கள் தலா 1 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுத்துள்ளார்கள். 

Gallery