என்னடா இது சுரேஷ் ரெய்னாவுக்கு வந்த சோதனை!! சிஎஸ்கேவுக்கு ஆதரவாக சின்னதல..
கடந்த பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் ஆடுவதில் இருந்து தள்ளி வைக்கப்பட்டவர் சுரேஷ் ரெய்னா. இதையடுத்து எம் எஸ் தோனிக்கு பிறகு சுரேஷ் ரெய்வாவும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதன்பின் ஐபிஎல் போட்டியில் சென்னை ஆதரவாக சிஎஸ்கே அணியில் ஆடி வந்தார். கடந்த ஆண்டு முற்றிலும் ஆட்டத்தை ஆடாத சுரேஷ் ரெய்னாவை இந்த ஆண்டு டாடா ஐபிஎல் போட்டியில் சென்னை உட்பட 10 அணிகளும் ஏலத்தில் எடுக்காமல் சோல்ட் அவுட் லிஸ்ட்டில் சேர்த்தது.
இதனால் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து சுரேஷ் ரெய்னா முன்னாள் இந்திய அணியின் முக்கியப்பொருப்பில் இருந்த ரவிசாஸ்த்திரியுடன் சேர்ந்து போட்டி வர்ணனையாளராக பணியாற்றவுள்ளாராம்.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள சென்னை கல்கொத்தா போட்டியின் ஆரம்பத்தில் ரசிகர்களுடன் கலக்கலப்பாக பேட்டியெடுத்துள்ளார் சுரேஷ் ரெய்னா. அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் ஷாக்காகி பார்த்தபடி ட்ரோல் செய்து மீம்ஸ் புகைப்படங்களாக வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.








