பண்றதெல்லாம் பண்ணிட்டு சின்னத்தல வேறயா? ரெய்னாவை ஒதுக்கிய சிஎஸ்கே..

dhoni csk ipl sureshraina chennaisuperking chinnathala mripl
By Edward Feb 13, 2022 06:53 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியில் சேர மட்டுமில்லாமல் உலக நாடுகளுக்காக அணியின் வீரர்களை சேர்க்க ஒரு அங்கமாக இருப்பது ஐபிஎல் போட்டி. கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போட்டி இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது என்று கூறப்படுகிறது.

இரு அணிகள் சேர்க்கப்பட்டு 204 வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம்தேதியில் நடைபெற்று நிறைவுக்கு வந்தது. அதிகபட்சமாக இஷான் கிஷான் 15.25 கோடிக்கு ஏலம் சென்றார்.

இந்தியா சார்ப்பாக மிஸ்டர் ஐபிஎல் என்று புகழப்படும் ரெய்னா சர்வதேச போட்டிகளில் விடைபெற்றாலும் ஐபிஎல் போட்டியில் விலையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவேயில்லை.

இந்நிலையில் இந்த ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவின் தொகை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டாலும் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை. அதிலும் பல ஆண்டுகளாக உழைத்த சிஎஸ்கே அணி கூட ஏலத்தில் பேசாமல் அமைதி காத்தார்களாம். அப்படி எடுக்காமல் ஃபீல் பண்ணி இணையத்தில் பதிவு போட்டதை பலர் கலாய்த்து வருகிறார்கள்.