ஐபிஎல் டிஆர்பி-க்கு ஆப்பு வைத்த சென்னை, மும்பை அணி? இத்தனை கோடி நஷ்டமாம்..
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்று வரும் ஐபிஎல் போட்டியை ஸ்டார் நிறுவனம் தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் ஒளிப்பரப்பு செய்து வருகிறது.
இந்த சீசனுக்காக விளம்பரத்தில் மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஸ்டார் நிறுவனம் வசூலித்துள்ளது. ஆனல் இது 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்த பெரும் அளவில் ஏலம் போகும் என்று எதிர்ப்பார்த்திருந்தனர்.
டிஆர்பி-யில் அடிவாங்கும் ஸ்டார்:-
தொலைக்காட்சியில் மக்கள் அதிகமாக பார்க்கும் காலம் ஐபிஎல் போட்டி மற்றும் உலககோப்பை போட்டி தான். அப்படி கடந்த ஆண்டு மொத்த ஸ்டார் தொலைக்காட்சியின் ரேட்டிங் 3.75 ஆக இருந்தது.
இந்த ஆண்டு 14 சதவீதம் குறைந்து 2.75 என்ற அளவில் தான் பதிவாகியுள்ளதாம். இதனால் ஸ்டார் நிறுவனத்திற்கு 33 சதவிதம் அதாவது கடந்த ஆண்டு 26 கோடி அளவில் ஒரு வாரத்தில் பெற்ற நிலையில் இந்த ஆண்டு 26 ஆம் தேதி முதல் 1 ஏப்ரல் வரை 22 கோடி மட்டுமே வசூல் பார்த்துள்ளது.
என்ன காரணம்:-
இதற்கு பல விதங்களில் காரணங்கள் கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டியில் இந்த ஆண்டு அதிகமாக எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் கடந்த இரு சீசனும் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் நடத்தப்பட்டதால் தொலைக்காட்சியில் மட்டும் பார்க்க வேண்டும் என்ற நிலை உருவானது.
ஆனால் தற்போது இந்தியாவில் ஒருசில நகரங்களில் மட்டுமே போட்டியை நடத்தி வருகிறது. முக்கிய காரணமாக ஆரம்பத்தில் முதல் போட்டியாக ஆடி வந்த சென்னை-மும்பை அணிகள் இந்த ஆண்டு மோதவில்லாததும் ஒரு காரணம்.
அதேபோல் இரு அணிகளிம் தொடர்ந்து ஹார்ட்டிக் தோல்வியை சந்தித்ததும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தோனி கேப்டன்சி மிஸ்ஸிங், ரெய்னா ஐபிஎல்லில் இல்லை என பல காரணங்கள் வரிசைப்படுத்தி இணையத்தில் செய்திகள் வெளியாகியும் வருகிறது.