அதுல என்ன ஆண்கள், பெண்கள்...யார் வேணாலும் பண்ணலாம்!! ரச்சிதா கொடுத்த டிப்ஸ்..
Fire ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து பின் வெள்ளித்திரையில் கால்பதித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அவர் நடிப்பில் Fire என்ற படம் காதலர் தினத்தன்று ரிலீஸாகியது.
இப்படத்தில் ரச்சிதா, படுகிளாமர் ரோலிலும் படுக்கையறை காட்சியிலும் நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார். தற்போது ரச்சித்தா அளித்த பேட்டியொன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
பேட்டி
அந்த பேட்டியில், நடிகையாய் இருப்பதால் கொஞ்சம் ஹேர், உடம்பு போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அதற்காக நான் எப்பவுமே ஆயில் உணவை தவித்துவிடுவேன்.
அதனால் காலையில் எழுந்ததும் சத்துமாவு கஞ்சி குடித்துவிடுவேன். அதுவும் அம்மா வீட்டில் தயாரித்தது தான். பின் தினமும் 11 மணிக்கு ஒரு இளநீர் குடித்துவிடுவேன். 1 மணிக்கு பெரும்பாலும் காய்கறி, கீரை, கூட்டு, பொரியல்ம் தயிர் தான் இருக்கும் அதை சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார்.
மேலும், எனக்கு சினிமாவிற்கு வருவதற்கு முன் முகம் முழுக்க பருக்கலாக இருக்கும், பலமுறை முயற்சி செய்தேன், ஆனால் அது போகவே இல்லை. அப்போது ஒரு மருத்துவர் உணவு சாப்பிடும் முறையையும் தூங்கும் நேரத்தையும் மாற்ற சொல்லியப்பின் தான் சில மாதங்களில் முகத்தில் பருக்கள் குறைந்தது.
ஆண்களும் அதை செய்யலாமா என்ற கேள்விக்கு, அது என்ன ஆண்கள், பெண்கள், இதை யார் வேண்டுமானாலும் பண்ணலாம் என்று பதிலளித்துள்ளார் ரச்சிதா மகாலட்சுமி.