என்னது நடிகர் விஷால் மதம் மாறிவிட்டாரா? இந்த ஒரு ட்விட்டால் பரவும் தகவல்
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் விஷால். ஆனால் ஹிட் கொடுக்க முடியாமல் திணறுகிறார். மேலும் அவரை நிச்சயதார்த்தம் செய்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார்.
இதெல்லாம் போதாதென்று அரசியலில் குதித்த விஷாலுக்கும் பல பிரச்சனைகள் தான். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அவர் தலை மீது பல பிரச்சனைகள் கத்தியாகி தொங்கிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நடிகர் சங்க தேர்தலில் விஷால் ஜெயித்தது மட்டுமே அவருக்கு கிடைத்த ஒரே ஒரு ஆறுதல். இந்நிலையில் விஷால் மதம் மாறிவிட்டார் என செய்தி பரவி வருகிறது.
அவரது தங்கைக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் அதை மகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் அவர். அந்த ட்விட்டில் இறுதியில் "இன்ஷா அல்லா" என விஷால் குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த அனைவரும் ஷாக் ஆகி 'விஷால் மதம் மாறிவிட்டாரா' என கேட்டு வருகின்றனர்.
Well wat more can I ask.
— Vishal (@VishalKOfficial) April 13, 2022
Supa happy to become an uncle again. The princess is born today to my princess darling sister aishu.
May god bless the new born girl and the couple.
Inshaallah. God bless. ????