42 வயதில் நடிகை த்ரிஷாவுக்கு கல்யாணமா!! மாப்பிள்ளை சினிமா நடிகரா? இல்லையா?
Trisha
Tamil Cinema
Marriage
By Yathrika
த்ரிஷா நடிகை
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே வலம் வருபவர் தான் நடிகை த்ரிஷா.
மாடலிங் துறையில் முதன்முதலில் களமிறங்கி பின் அழகி பட்டம் வென்று அப்படியே சினிமா பக்கம் வந்தவர். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் தோன்றியவர் பின் முன்னணி நாயகியாக தமிழ், தெலுங்கு என கலக்கினார்.
இடையில் எந்த படமும் நடிக்காமல் இருந்த த்ரிஷா மார்க்கெட் இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. முன்னணி நடிகர்களுடன் இணைந்து அதிகம் படம் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை த்ரிஷாவிற்கு விரைவில் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. மாப்பிள்ளை பஞ்சாப்பில் உள்ள சண்டிகரைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிகங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.