நடிகை ராஷ்மிகா மந்தனா கர்ப்பமாக இருக்கிறாரா..? அவரே வெளியிட்ட பதிவு

Vijay Deverakonda Rashmika Mandanna Actress
By Kathick Apr 04, 2026 03:30 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும், நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இதன்பின், இவர்களுடைய திருமண வரவேற்பு விழா எவ்வளவு விமர்சையாக நடந்தது என்பதை நாம் அறிவோம். இதில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றிருந்தனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா கர்ப்பமாக இருக்கிறாரா..? அவரே வெளியிட்ட பதிவு | Is Rashmika Mandanna Pregant Post Goes Viral

திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், ராஷ்மிகா கர்ப்பமாக இருக்கிறார் என்கிற செய்தி இணையத்தில் உலா வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் "இப்போது நாங்கள் மூன்று பேர்" என போட்டிருப்பதுதான் இப்படி ஒரு செய்தி பரவுவதற்கு காரணம்.

அவர் கர்ப்பமாக இருப்பதை தான் அறிவித்திருக்கிறார் என நினைத்துக்கொண்டு நெட்டிசன்கள் கமெண்டுகளில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அவர் கர்ப்பமாக இல்லையாம். ராஷ்மிகா இரண்டாவதாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்திருக்கிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா கர்ப்பமாக இருக்கிறாரா..? அவரே வெளியிட்ட பதிவு | Is Rashmika Mandanna Pregant Post Goes Viral

Rashmika & Ru என்கிற கற்பனை கதாபாத்திரத்துடன் அவர் பேசுவது போல அனிமேஷன் புகைப்படங்களை அந்த கணக்கில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த அனிமேஷன் கதாபாத்திரம் மற்றும் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா இருப்பதைதான் அவர் மூன்று பேர் என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவுதான் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி பரவுவதற்காக காரணமாக அமைந்துவிட்டது.