இயக்குநருடன் டேட்டிங்கில் சமந்தா? புகைப்படத்தால் எழுந்த கேள்வி
நடிகை சமந்தா கடந்த 2021ம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்தார். இதன்பின் சமந்தாவின் இரண்டாம் திருமணம் குறித்து பல வதந்திகள் வந்தன. ஆனால், அவை யாவும் உண்மையில்லை என பின் தெரியவந்தது.
ஆனால், தற்போது பிரபல இயக்குநருடன் நடிகை சமந்தா டேட்டிங்கில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. நடிகை சமந்தா தற்போது World Pickleball Leagueல் Chennai Super Champs என்கிற அணியை வாங்கியுள்ளார்.
தனது அணி பங்கேற்கும் போட்டிகளில் சமந்தாவின் கலந்துகொண்டு, அணிக்கு உற்சாகமளித்து வருகிறார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், வெளிவந்த புகைப்படங்களில், சிட்டாடல் வெப் தொடரின் இயக்குனர் Raj Nidimoru உடன் சமந்தா கைகோர்த்து நிற்கும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், 'இருவரும் காதலிக்கிறார்களா' என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.