விஜய் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா? மாஸ் டைட்டில் எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம்
தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் தற்போது தளபதி66 படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்டை மையப்படுத்தி தான் இருக்கும் என இயக்குனர் முன்பே கூறிவிட்டார்.
மேலும் படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையை சேர்ந்த முக்கிய சினிமா நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ராஷ்மிகா விஜய் ஜோடியாக நடிக்க சரத்குமார், பிரகாஸ்ராஜ், பிரபு உள்ளிட்ட பலரும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கின்றனர்.

டைட்டில்
சமீபத்தில் தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு 'வாரிசு' என தமிழில் பெயர் சூட்டி இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. இருப்பினும் இது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.