22 வயதில் தனியாக அழைத்த நடிகர்.. பல உண்மைகளை உடைத்த விஜய் பட நடிகை..

Vijay Isha Koppikar Gossip Today Ayalaan
By Edward 9 months ago
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயலான் படத்தில் சிறு ரோலில் நடித்தவர் நடிகை இஷா கோப்பிகர். 1998ல் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை படத்தில் கதாநாயகியாக நடித்த இஷா கோப்பிகர், விஜய்யின் நெஞ்சினிலே படத்தில் ஜோடியாக நடித்தார்.

22 வயதில் தனியாக அழைத்த நடிகர்.. பல உண்மைகளை உடைத்த விஜய் பட நடிகை.. | Isha Koppikar Opens Up About Casting Couch

இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு இந்தி படங்களில் நடித்து வந்த இஷா கோப்பிகர் 20 ஆண்டுகள் கழித்து தமிழில் அயலான் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இளம் வயதில் தனக்கு நடந்த கசப்பான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

22 அல்லது 23 வயது இருக்கும் போது சினிமாத்துறைக்கு வந்து பாலிவுட்டில் நடிக்க துவங்கினேன். அப்போது முன்னணி நடிகர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு தனிமையில் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டார். என் கார் ஓட்டுநர் என்னுடன் வரக்கூடாது என்று கண்டீஷன் போட்டார். ஏற்கனவே அவரை பற்றி சில விஷயங்கள் நான் அறிந்த நிலையில் அன்று அவரை சந்திக்க நான் மறுத்துவிட்டேன்.

அதேபோல், நடிக்க துவங்கிய புதிதில் எனக்கு 18 வயது இருக்கும் போது ஒரு நடிகையும் அவருடைய PAவும் என்னை அழைத்து நடிகர்களிடம் கொஞ்சம் நெருக்கமான நட்போடு பழகிக்கொள், அப்போது தான் உனக்கு வேலை கிடைக்கும் என்று கூறினார்கள்.

22 வயதில் தனியாக அழைத்த நடிகர்.. பல உண்மைகளை உடைத்த விஜய் பட நடிகை.. | Isha Koppikar Opens Up About Casting Couch

நட்போடு பழகுவது சரி, அது என்னை நெருக்கமான நட்பு என்று எனக்கு அப்போது புரியவில்லை. அதன்பின் தான் நடிகை இத்தா கபூர் பல விஷயங்கலை எனக்கு புரிய வைத்தார். திமிருரோடு நடந்து கொள்ள அவர் தான் எனக்கு கற்றுக்கொடுத்தார் என்று நடிகை இஷா கோப்பிகர் ஓப்பனாக பேசியிருக்கிறார்.