அதிமுகவில் அஜித்-ஆ! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இப்படியொரு முடிவு எடுத்தாரா
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி படம் வெளிவந்து வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக குட் பேட் அக்லி படத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
அஜித் நடிப்பை தாண்டி கார் ரேஸில் ஆர்வத்துடன் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவரை அரசியலில் களமிறக்க மறைந்த முன்னாள் முதல் ஜெயலலிதா நினைத்துள்ளார் என்பது குறித்து எத்தனை பேருக்கு தெரியும். ஆம், இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து, பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தகவலை பகிர்ந்துள்ளார். இதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு முறை தனது ஆலோசகரிடம் அஜித்தை தனது கட்சியில் இணைப்பது குறித்து பேசியுள்ளார்.
அஜித்திற்கு ஜெண்டில் மேன் என்கிற பார்வை மக்களிடம் இருக்கிறது, அதனால் அவரை அதிமுகவில் இணைத்துக்கொள்ளலாம் என ஜெயலலிதா நினைத்தாராம். ஆனால், அஜித் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் ஆனால், அஜித் தான் சரியான நபர் என்றும் அவரே கூறினாராம்.
இந்த தகவல் வெளிவந்த நிலையில், ஒருவேளை அஜித் அரசியலுக்கு ஜெயலலிதாவின் ஆதரவுடன் வந்திருந்தால் கண்டிப்பாக முதல்வர் ஆகியிருப்பார், இவ்வளவு பெரிய பொறுப்பை மறுத்துவிட்டாரே என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.