வாய்ப்ப்பில்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்த யுவன்!! தூக்கிவிட்ட இயக்குனர் கொடுத்த சம்பளம்..
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் யுவன் சங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் வாரிசாக அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்து வந்தார் யுவன்.
அதன்பின் ஒருசில படங்களில் பணியாற்றிய யுவன் துள்ளுவதோ இளமை, மெளனம் பேசியதே உள்ளிட்ட படங்களின் வெற்றியை ஆரம்பித்து தற்போது பல சூப்பர் ஹிட் படங்களால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ஜே சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், யுவன் சங்கர் ராஜா, வாய்ப்பில்லாமல் வீட்டில் தான் இருந்தார்.

அப்போது ஜூனியர் சீனியர் என்ற படத்தினை சக்தி இண்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து 2002ல் வெளியிட்ட அப்படத்தில் யுவன் இசையமைத்திருந்தேன். படத்தின் இசை குறித்து தயாரிப்பாளர் லோகநாதனிடம் கேட்ட போது தேவா அவர்களை சிபாரிசு செய்தார்.
ஆனால் நான் யுவன் சங்கர் ராஜாவை அறிமுகம் செய்து வைத்தேன். ஆனால் தயாரிப்பாளர் அரவிந்தன் படம் பிளாப்பாச்சே, வேண்டாம் என்றூ கூறினார்.
ஆனால் யுவன் மீது நம்பிக்கை வைத்து நான் அவரை அந்த படத்தில் இசையமைக்க வைத்தேன் என்றும் அப்படத்திற்காக வெறும் 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
அப்படத்திற்கு பின் யுவன் சங்கர் ராஜாவின் இசை பயணம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருக்கிறது என்றும் அவரது அம்மா என்னை பாராட்டியும் பேசியிருக்கிறார் என்று இயக்குனர் சுரேஷ் கூறியுள்ளார்.