ரூ. 3000 கோடி சொத்துக்கு வாரிசு!! வேண்டாம்னு சொன்ன ஜாக்கி சான் மகன்..
ஜாக்கி சான்
ஹாலிவுட்டில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் ஜாக்கி சான், அதிகமான அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்து பெரியளவில் கவர்ந்து வந்தார். கடந்த மே மாதம் அவர் நடிப்பில் கரேத்தே கிட் :லெஜண்ட்ஸ் படம் ரிலீஸ்யாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில் ஜாக்கி சான் தான் சம்பாதித்த ரூ. 3000 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும், தன்னுடைய ஜாக்கிசான் பவுண்டேஷன் மூலம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
ஏழை மக்களுக்காக தன் சொத்துக்களை வழங்கியுள்ள ஜாக்கி சானுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் ஜாக்கி சானின் மகன், வாரிசு என்பதற்காக அப்பாவின் சொத்துக்களை பெற விரும்பவில்லை என்று பேட்டியொன்றில் தெரிவித்திருப்பது பலருக்கும் வியப்பாக இருந்துள்ளது.

மகன் ஜேசி சான்
ஜாக்கி சான், என்னுடைய 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முழுவதையும் நான் ஏழைகளுக்காக அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டேன், இதை பற்றி என் மகனிடம், உனக்கு எந்தவித வருத்தமும் இல்லையா? என்று கேட்டேன்
. அதற்கு என் மகன் ஜேசி சான், நானும் திறமைசாலிதான், தானாகவே உழைத்து பணம் சம்பாதிக்க விரும்புகிறேன். நீங்கள் சம்பாதித்த செல்வத்தை நான் வாரிசு என்பதற்காக கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, பிறர் உதவியின்றி உழைப்பின் மூலம் நானும் முன்னேற ஆசைப்படுகிறேன் என்று என்னிடம் கூறிவிட்டான் என்று ஜாக்கி சான் கூறியிருக்கிறார்.