தனி தீவு வாங்கி சொகுசாக வாழ்ந்து வரும் 39 வயது நடிகை.. யார் தெரியுமா
Bollywood
Jacqueline Fernandez
By Kathick
திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், நடிகைகள் சொகுசு கார்கள், பங்களா, நிலம், வெளிநாட்டிற்கு ட்ரிப் என செலவு செய்வார்கள்.
ஆனால், இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ஒருவர், கோடிக்கணக்கில் செலவு செய்து, தனக்கென்று தனி தீவு ஒன்றை வாங்கி இருக்கிறார். அவர் யார் தெரியுமா, வேறு யாருமில்லை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான்.
இவர் பல வருடங்களாக சினிமாவில் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை வைத்து இலங்கை அருகில் ஒரு தனி தீவை வாங்கியுள்ளார். 2012ல் அந்த தீவை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அப்போதே அந்த தீவின் விலை சுமார் ரூ. 3 கோடி இந்திய ரூபாய் ஆகும் என்கின்றனர். ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு சொகுசு மாளிகை கட்ட திட்டமிட்டுள்ளாராம்.