10 பிளாப் படங்கள்!! சொந்தமா தீவு வைத்திருக்கும் ஒரே நடிகை யார் தெரியுமா..
இந்தியாவில் சில நடிகைகள் தொடர் பிளாப் படங்களை கொடுத்து காணாமல் போவதுண்டு. ஆனால் ஒரு நடிகை 10 படங்களுக்கும் மேல் பிளாப் படங்களை கொடுத்தும் தனியாக தீவினை வைத்திருக்கிறார் ஒரு நடிகை.
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
2006ல் மிஸ் யுனிவர்ஸ் இலங்கை பட்டத்தை வென்று பிரபலமான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், 2009ல் வெளியான அலாடின் என்ற கற்பனை நகைச்சுவை படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகினார்.
இதனையடுத்து பல படங்களில் நடித்து வந்த ஜாக்குலின், கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சமீபகாலமாக பல ஆயிரம் கோடி மோசடி வழக்கில் சிக்கியவருடன் நெருக்கமாக இருந்து சர்ச்சையில் சிக்கினார். நடிப்பை தாண்டி சில ஆடம்பர முதலீடுகளையும் செய்துள்ளார்.
தீவு
மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று இலங்கையில் உள்ள அவரது தீவு தான். தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள நான்கு ஏக்கர் தீவு, 2012ல் சுமார் ரூ. 2.5 கோடிக்கு அவர் வாங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த தீவு முன்னாள் இலங்கை கிரிக்கெட் கேப்டன் குமார் சங்கராவுக்கு சொந்தமான மற்றொரு தனியார் தீவுக்கு அருகில் உள்ளது.
இது ஆடம்பர ரியல் எஸ்டேட்டுக்கான ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது. தனிப்பட்ட ஓய்வு இடமாக மாற்ற ஒரு வில்லாவை கட்ட ஜாக்குலின் திட்டமிட்டுள்ளாராம். இதுபாலிவுட் பிரபலங்களின் அசாதாரணமான முதலீடாகும்.