ஜெய்பீம் கதையை கமல்ஹாசன் முன்பே கூறிய படமா? அப்போ என்ன சார் பண்ணீங்க எல்லோரும்..

தமிழ் சினிமாவில் தற்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் படம் ஜெய் பீம். சூர்யா தயாரித்து, நடித்த இப்படம் வன்னிய சமுதாயத்தில் இழிவு படுத்தியுள்ளது என புகாரளித்து வழக்கும் போடப்பட்டது. படம் வெளியானது முதல் பல எதிர்ப்புகளை சந்தித்து வரும் சூர்யா பாராட்டு தெரிவித்தவர்களுக்கு மட்டும் நன்றி கூறி பதிலளித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் மையக்கருத்தாக இருப்பதை போன்று கமல் ஹாசனின் படம் ஒன்றில் கூறியுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

கமலின் சினிமா கேரியரில் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்தது அன்பே சிவம். இந்த படத்தில் நாசர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவரது பெயர் அந்த படத்தில் கந்தசாமி படையாட்சி என வெளிப்படையாக வைத்திருப்பார். இதுவும் ஒரு வகையில் வன்னியர் சமூகத்தினரை குறிக்கும் பெயர் தான்.

கமல் ஹாசன் நடித்து பெரிய வெற்றியை கொடுத்த படம் அன்பே சிவம். அதில் தொழிலாளிகளை முதலாளியான நாசர் நசுக்குவது போல் காட்டப்பட்டிருக்கும்.

2003 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் தியேட்டரில் ஓடும் போது இப்படிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் வரவில்லை எனவும் சூர்யாவுக்கு மட்டும் இப்படி எதிர்ப்பு வருவது சரி இல்லை எனவும் கூறுகின்றனர். தற்போது எது நடந்தாலும் சூர்யாவை தான் குத்தம் சொல்லி புகாரளித்தும் வருவார்கள்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்