ஜெயிலர் 2 பாடலுக்கு கர்ப்பமாக இருப்பது தெரியாமல் ஆடினேன்!! நடிகை பூர்ணா ஓபன் டாக்..

Rajinikanth Anirudh Ravichander Actress Poorna
By Jai Aug 29, 2026 12:00 PM GMT
Report

நடிகை பூர்ணா

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து திருமணமாகி குழந்தைப் பெற்றப்பின் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தவர் தான் நடிகை பூர்ணா.

ஜெயிலர் 2 பாடலுக்கு கர்ப்பமாக இருப்பது தெரியாமல் ஆடினேன்!! நடிகை பூர்ணா ஓபன் டாக்.. | Jailer 2 Song Without Knowing I Was Pregnant

தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் பூர்ணா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ஆலோ அலப்பலோ என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ஆலோ அலப்பலோ பாடலின் போது நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

கர்ப்பமாக இருப்பது

அதில், எனக்கு 5 மாதங்களுக்கு முன் தான் 2வது குழந்தை பிறந்தது. ஜெயிலர் 2வின் ஆலோ அலப்பலோ பாடலுக்காக நான் 6 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அகண்டா படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்றேன். அப்போது தான் நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் எனக்கு தெரிந்தது.

ஜெயிலர் 2 பாடலுக்கு கர்ப்பமாக இருப்பது தெரியாமல் ஆடினேன்!! நடிகை பூர்ணா ஓபன் டாக்.. | Jailer 2 Song Without Knowing I Was Pregnant

அது மிகவும் கடினமாக நடனத்தை ஆடிவிட்டு, என் அம்மா நீ கர்ப்பமாக இருக்க வாய்ப்பே இல்லை என்று சொன்னார். மீண்டும் ஒருமுறை செக் செய்து பாரு என்று கூறினார். 2வது முறை செக் செய்தபோதும் கர்ப்பமாக இருப்பது உறுதியானது.

என்னுடைய இரண்டாவது குழந்தையை பார்க்கும் ஒவ்வொரு முறையும், அந்த பாடலுக்கு நடனமாடியது தான் நினைவுக்கு வரும். இப்போது அந்த பாடலை அனைவரும் பார்த்து பாராட்டும் போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்த பாடலுக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளும் என் குழந்தையையே சேரும் என்று கூறியிருக்கிறார்.