அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்: புது உலகிற்கு அழைத்து சென்றாரா? ஜேம்ஸ் காம்ரூன்..

Fire English Movie Review Hollywood
By Edward Dec 19, 2025 08:30 AM GMT
Report

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ரிலீஸாகியுள்ள படம் தான் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ். உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள இப்படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்: புது உலகிற்கு அழைத்து சென்றாரா? ஜேம்ஸ் காம்ரூன்.. | James Cameron S Avatar Fire And Ash Movie Review

இதுதொடர்பாக நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வரும் நிலையில், அதில் ஒருவர், ஜேம்ஸ் கேம்ரூன் இன்னொரு சினிமாடிக் அனுபவத்தை கொடுத்திருக்கிறார். அவதார் படத்தின் இந்த அத்தியாயம் பண்டோராவை தீவிரமான, உணர்ச்சிப்பூர்வமான இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. விஷுவலில் பிரம்பிக்க வைக்கிறது.

அவதார் 3 காவிய கதை சொல்லல் மீதான கேமரூனின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மிகச்சிறந்த திரையரங்கு அனுபவத்தை தரும் படம் இது, அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படத்திற்கு 10/10 மதிப்பெண் தருவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் ஒருவர், நெகிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்: புது உலகிற்கு அழைத்து சென்றாரா? ஜேம்ஸ் காம்ரூன்.. | James Cameron S Avatar Fire And Ash Movie Review

அதில், அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் கதை சொல்லும் விதத்தில் பெரியளவில் ஈர்க்கவில்லை. 2009 அவதார் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு காரணமே, மக்கள் இதுவரை பார்க்காத ஒரு உலகத்தை காட்டியது தான். ஆனால் அதே உத்தியை அடுத்த இரு படங்களுக்கும் பயன்படுத்த முடியாது.

இந்த படத்தில் கதை ஈர்க்கக்கூடியதாக இல்லை, விஷுவல் ரீதியாக படம் அற்புதமாக இருந்தாலும் கதையில் சற்று தடுமாறிவிட்டது அவதார் 3. நெருப்பு ருப்பு மனிதர்களின் சோகங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டது. பார்வையாளர்களுக்கு புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதிலும் தவறிவிட்டது என்று கூறியிருக்கிறார்கள்.

GalleryGalleryGalleryGallery