கிட்னி இழந்த அப்பா...சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 5 மேடையை உருக வைத்த சிறுமி..
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. இந்நிகழ்ச்சியில் சீனியர் சீசன் 5 சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 தொடங்கியுள்ளது.

சிறுமி மித்ரா
தற்போது மெகா ஆடிஷன் நடந்து கொண்டிருக்கும் நிலையில், போட்டியாளராக கலந்து கொண்டு செலக்ட்டாகிய சிறுமி மித்ரா தன்னுடைய அப்பா, அம்மாவிற்கு நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்து அரங்கில் இருந்தவர்களை உருக வைத்திருக்கிறார்.
வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த அப்பாவின் கிட்னி செயலிழந்து போனது. தன்னுடைய அம்மா, தன்னுடைய ஒரு கிட்னியை கொடுத்திருக்கிறார். ஆனால், சிகிச்சையின் போது சில பிரச்சனையால் இரண்டு கிட்னியையும் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அவர்களால் இரும்பவோ, தும்பவோ, சிரிக்கவோ முடியாத நிலையால் அம்மாவால் வரமுடியவில்லை என்று அவர் பேசிய மேடையில் இருந்தவர்களை உருக வைத்துள்ளது.