சூப்பர் சிங்கர் 8 குட்டி குழந்தைக்கு என்ன தெரியும்? நிகழ்ச்சியை கண்டபடி திட்டிய ஜேம்ஸ் வசந்தன்
பிரபல தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக ஈர்த்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள்.
இறுதி போட்டி
ஜூனியர், சீனியர் என இரு நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8வது சீசன் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அபீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா என்று 5 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த சீசனில் தகுதி பரிசை கிரிஷாங் தட்டி சென்றார். அவருக்கு 60,000,00 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
முதல் இரண்டாம் ரன்னர் அப்
இவரை தொடர்ந்து 2ம் இடத்தை ரிஹானாவும், 3ம் இடத்தை நேஹாவும் பெற்றனர். ஆனால், பலரும் நேஹா தான் முதல் பரிசை பெற்று இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் இறுதி சுற்றில் சுட்டிபெண் ரிஹானா அனிருத்தின் கருத்தவெல்லாம் கலீஜாம் பாடலை பாடினார்.
ரிஹானா பாடல்
இந்த பாடலில் சில கெட்டவார்த்தைகளை பாடியதை பார்த்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஒரு கெட்ட வார்த்தையை எப்படி ஒரு குழந்தையை பாட வைக்கலாம். ஒரு குழந்தையை அந்த வார்த்தை சொல்லி பாடச்சொன்னால் சென்சார் பிரச்சனை வரும் என்பது தெரியாதா, கெட்ட வார்த்தைகளைப் பாடித்தான் உங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டிய நிலையில் நீங்களெல்லாம் இருக்கிறீர்களென்றால் அதற்கான தளத்தைத் தேர்ந்தெடுங்கள்.
ஆண்களுக்கு மட்டும் பெரியவர்களுக்கு மட்டும் என்பது போன்ற எச்சரிக்கையுடன் பெரியவர்களுக்கு அதற்குப் பிறகு அது பயனாளரின் பொறுப்பு! இப்படி குழந்தைகளும் கேட்கிற, பாடுகிற வெகுஜன ஊடகமான சினிமாப் பாடல்களுக்குள் நஞ்சை இடைச்சொருகல் செய்து ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் களங்கப்படுத்தாதீர்கள என்று கடுமையாக விமர்சித்து கருத்தினை பதிவிட்டுள்ளார்.