தூக்கிவிட்ட பாரதிராஜாவிற்கு வீடு வாடகை கொடுத்த காமெடி நடிகர் ஜனகராஜ்! குடியால் இழந்த வாழ்க்கை!

bharathiraja janakaraj
By Edward Aug 03, 2021 09:30 AM GMT
Report
278 Shares

தமிழ் சினிமாவில் 70, 80, 90களில் காமெடியனாக கொடிக்கட்டி பறந்த நடிகர் ஜனகராஜ். 1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் இயக்குநர் பாரதிராஜா அவரை அறிமுகப்படுத்தினார்.

லட்சாதிபதியாக இருந்த ஜனகராஜ் தன்னை தூக்கிவிட்ட பாரதிராஜாவிற்கு தன் வீட்டினை வாடகைக்கு விட்டுள்ளார். எதார்த்தமான காமெடியில் தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை வைத்துக் கொண்டு 200 படங்களுக்கு மேல் நடித்திருந்த ஜனகராஜ் சில கெட்ட பழக்கங்களால் அதாவது படப்பிடிப்பிற்கு குடித்துவிட்டு வரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே படவாய்ப்புகள் குறைந்து ஆள் அடையாளம் தெரியாமல் 2008ல் விலகினார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஜனகராஜ், 96 படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.