உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் மாதவன்.. இதுதான் அந்த சீக்ரெட்
மாதவன்
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் மாதவன் ராக்கெட்டரி படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி இருந்தார். அந்த உடல் எடையை குறைக்க அவருக்கு 21 நாட்களில் மட்டும் ஆகியுள்ளது. அதை அவர் எப்படி செய்தார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
21 நாட்களில் தான் எப்படி உடல் எடையை குறைந்தேன் என்பது குறித்து நடிகர் மாதவன் பேசும்போது, அதற்கு தனக்கு உதவிய விஷயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். நடிகர் மாதவன் உடல் எடையை குறைப்பதற்காக Intermittent fasting எனப்படும் முறையை பின்பற்றி இருக்கிறார். அது மட்டுமின்றி, தான் சாப்பிடும் உணவை சுமார் 45-60 முறை மென்று சுவைத்து சாப்பிட்டு இருக்கிறார். தனது இரவு உணவை 6.45 மணிக்குள் முடித்துக்கொள்கிறார்.
காலை நடைப்பயிற்சி மற்றும் இரவில் ஆழ்ந்த தூக்கம் ஆகியவை இவருக்கு உடல் எடையை குறைக்க உதவியிருக்கிறது. Diet-ல் நிறைய பழச்சாறுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பச்சை காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். அதோடு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடவே வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். இப்படிதான் அவர் உடல் எடையை குறைத்துள்ளார்.
Intermittent fasting என்றால் என்ன?
Intermittent fasting என்றால் குறிப்பிட்டகால இடைவேளையில் மட்டும் உணவை உட்கொள்வதாகும். இது எடையை குறைக்க உதவுவதோடு, வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவுகிறது. பெரும்பாலானவர்கள் 16/8 முறையை பின்பற்றுகின்றனர். அதாவது, மதியம் 12 மணிக்கு சாப்பிடுகிறார்கள் என்றால், அதற்குள் இரண்டாவது உணவாக இரவு 8 மணிக்குள் உணவை முடித்துக்கொள்ள வேண்டும். இதன்பின், அடுத்த 16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இதனால் எடை நன்றாக குறையும் என்கின்றனர்.