மலேசியாவில் ஏன் ஜனநாயகன் ஆடியோ லான்ச்..விஜய் போட்ட கண்டீஷன்!! காரணம் இதுதான்..
ஜனநாயகன்
இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் 2026 ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவிலுள்ள தலைநகர் கோலாலம்பூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒரு லட்சம் பேர் வரைக்கும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில், மலேசியாவில் ஆடியா லான்ச் நடத்த என்ன காரணம் என்பதை மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

அதில், விஜய்யின் கடைசி படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. படம் நடித்து முடித்தப்பின் ரகசியமாக கதைக்கேட்டு வருவதாக தகவல்கள் வருவதெல்லாம் உண்மையில்லை. இன்றும் விஜய், லைம்லைட்டில் இருக்கும் நடிகர், ரூ. 200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குபவர் என்பதால் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
ஜனநாயகன் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை வாங்க ஆள் இல்லை என்றார்கள், ஆனால் இப்போது 10 பேர் சேர்ந்து வாங்கியிருப்பதாக கூறுகிறார்கள். அப்படி விசாரித்ததில், 3 பேர் வாங்கியிருக்கிறார்களாம், அதாவது ஃபைவ் ஸ்டார் செந்தில், கோயம்புத்தூர், பெங்களூரை சேர்ந்த 3 பேர் சேர்ந்து ரூ. 115 கோடிக்கு ஜனநாயகன் படத்தை வாங்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத ஒரு பெரிய தொகை இது.
மலேசியாவில் ஏன்
ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி மலேசியாவில் ஏன் நடக்கிறது? இங்கே தமிழ்நாட்டில் விஜய் பேச தைரியம் இல்லையா? என்று பலரும் கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் விழாவை நடத்தினால் மறுபடியும் கட்டுக்கடங்காத கூட்டம், தள்ளுமுள்ளு, சர்ச்சை என சேர்ந்துவிடும்.

எனவே தேர்தல்வரை அப்படியொரு சம்பவம் நடக்க வேண்டாம் என்று விஜய் நினைப்பதால்தான் மலேசியாவில் விழா. டிசம்பர் 27 ஆம் தேதி ஆடியோ வெளியீட்டு விழாவை வைக்க இன்னும் ஒரு காரணம் இருக்கிறது.
இங்கு நடத்தினால் தயாரிப்பாளர்களுக்கு 10 கோடி ரூபாய் செலவாகும், ஆனால் அங்கே செலவு குறைவு. மலேசியாவில் இப்படத்தை வாங்கியிருப்பவரே, நிகழ்ச்சிக்கான செலவையும் பார்த்துக்கொள்வதாக கூறிவிட்டார். சென்னையில் உள்ள ஒரு டூரிசம் கம்பெனி, மலேசியா சுற்றுலாவுடன் ஆடியோ லான்ச் பார்க்கும் பேக்கேஜை அறிவித்துள்ளதாம்.
விஜய்யின் கடைசி படம் என்பதால், பெரிய இசை நிகழ்ச்சி நடத்தப்போகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு விஜய் ஒரேவொரு கண்டீஷன் போட்டுள்ளாராம். அதாவது மலேசியாவுக்கு சார்ட்டர்ட் பிளைட்டில் வந்து நிகழ்ச்சியில் பேசிவிட்டு, உடனடியாக கிளம்பிவிடுவேன் என்றும் அங்குள்ள அரசியல் தலைவர்கள்(பிரதமர், கவர்னர், கவுன்சிலர்) யாரையும் சந்திப்பது, போட்டோ எடுப்பது என எதுவுமே தனக்கு வேண்டாம் என்றும் சொல்லிவிட்டாராம்.