ஜனநாயகன் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Box office JanaNayagan
By Karthick Raja Aug 19, 2026 07:02 AM GMT
Report

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி, கௌதம் மேனன், சுனில், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

ஜனநாயகன் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Jananayagan Movie Final Collection

2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஜனநாயகன், பல தடைகளை தாண்டி கடந்த மாதம் வெளியானது.

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடினார்கள். ஆனால், கலவையான விமர்சனங்களும் எழுந்தன. அதேபோல், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது.

ஜனநாயகன் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Jananayagan Movie Final Collection

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மொத்தமாக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 323.5 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.