ஜனநாயகன் ஹிட் ஆகவேண்டும் என்றால் இவ்வளவு கோடி வசூல் செய்யவேண்டுமா.. மிகப்பெரிய சவால்
விஜய்யின் ஜனநாயகன் படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜனநாயகன் படத்தின் ப்ரீ பிஸினஸ் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக திரையரங்க உரிமை விவரங்களை எல்லாம் நீங்கள் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அந்த அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு ஜனநாயகன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சரி என்னதான் மிகப்பெரிய தொகைக்கு இப்படம் விற்பனை செய்யப்பட்டிருந்தாலும், ஹிட் ஆகவேண்டும் என்றால் அதைவிட இரண்டு மடங்கு வசூல் செய்வேண்டும். அப்படி ஜனநாயகன் படம் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்தால் ஹிட்டாகும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
- தமிழ்நாட்டில் ரூ. 220 கோடி வசூல் செய்தால் ஹிட்
- ஆந்திரா / தெலுங்கானாவில் ரூ. 20 கோடி வசூல் செய்தால் ஹிட்
- கர்நாடகாவில் ரூ. 30 கோடி வசூல் செய்தால் ஹிட்
- கேரளாவில் ரூ. 35 கோடி வசூல் செய்தால் ஹிட்
- வெளிநாடுகளில் ரூ. 215 கோடி வசூல் செய்தால் ஹிட்
மொத்தம் ஜனநாயகன் படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் ஹிட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.