படுதோல்வியை நோக்கி ஜனநாயகன், கடைசி படம் இப்படியா

Box office JanaNayagan
By Tony Aug 02, 2026 03:30 AM GMT
Report

ஜனநாயகன் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்த்தார்கள். அவர்கள் நினைத்தது போலவே பொங்கலுக்கு இந்த படம் வருவதாக இருந்த போது உலகம் முழுவதும் முன்பதிவு வசூலே ரூ 100 கோடிகளுக்கு மேல் நடந்தது.

ஆனால், சென்ஸார் பிரச்சனைகளால் இந்த படம் பொங்கல் அன்று வெளிவராமல் தள்ளி போக, பல பிரச்சனைகளை தாண்டி இரண்டு வாரம் முன்பு ஜனநாயகன் ரிலிஸ் ஆனது.

படுதோல்வியை நோக்கி ஜனநாயகன், கடைசி படம் இப்படியா | Jananayagan Overseas Box Office

முதல் 4 நாட்கள் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதிலும் ஓவர்சீஸில் இந்த படம் 7+ மில்லியன் டாலர் வசூல் செய்தது.

கண்டிப்பாக 15 மில்லியன் வசூல் செய்யும் என நினைத்த நிலையில் தற்போது வரை இந்த படம் வெறும் 8.5 மில்லியன் டாலர் தான் வசூல் செய்துள்ளது, இதனால் ஓவர்சீஸில் ஜனநாயகன் படுதோல்வியை சந்தித்துள்ளது.