விஜய் - திரிஷா ரெண்டு பேரும் தனியா பேசமாட்டாங்க..குறைவுதான்!! லியோ பட நடிகை ஓபன்..
விஜய் - திரிஷா
நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 23ஆம் தேதி ரிலீஸான படம் தான் ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 5 நாட்களாகிய நிலையில் உலகளவில் சுமார் ரூ. 222 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ஜனநாயகன் படத்தை முதல்நாள் முதல் காட்சியை பார்க்க திரிஷா சென்றிருந்தார்.

சமீபத்தில் விஜய்யுடன் திருமண நிகழ்ச்சிக்கும் முதலமைச்சரான பின், பாக்யராஜ் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு திரிஷா சென்றது பேசுபொருளானது.
இந்நிலையில், விஜய் - திரிஷா ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பார்கள்? என்ன பேசுவார்கள் என்று லியோ படத்தில் நடித்த பிக்பாஸ் நடிகை ஜனனி சீக்ரெட் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
நடிகை ஜனனி
அதில், விஜய் - திரிஷா இருவரும் ஜாலியாக பேசுவாங்க. பெரும்பாலும் எனக்கு வர சீன்களுக்கு எல்லாம் நான் நோட் பண்ணி இருக்கறதுனால, நான் ஏதாவது சொன்னா சாருக்கு கொஞ்சம் புரிஞ்சிடும்.

அப்போ திரிஷா மேம்-கு கொஞ்சம் புரியுறது கம்மியா இருக்கும். அப்போ அவங்க, என்ன சொன்னாங்கன்னு விஜய் சார்கிட்ட கேப்பாங்க. கேட்டா அவர் சொல்லுவாரு, அப்புறம் அவரு என்கிட்ட என்ன சொன்னேங்கிறதையும் சும்மா சொல்லுவாங்க. அப்போ ஸ்பாட்ல கொடுக்கிற ரியாக்ஷன் எல்லாம் க்யூட்டா இருக்கும். என்கிட்ட இப்போ கேட்டா, அந்த மாதிரி க்யூட் மொமண்ட்ஸ் தான் நிறைய இருக்கு.
விஜய் சார் - திரிஷா மேம் ரெண்டு பேரும் எப்போ செட்டுக்கு வந்தாலும் அந்த இடமே வேறமாதிரியான எனர்ஜியா மாறிடும். அவங்க ஹாய் அப்படின்னு சொல்லி பேசினாலே நமக்கு அந்த எனர்ஜி வந்துடும். சில டைம் நல்ல காமெடியாகவும் இருக்கும். விஜய் - திரிஷா ரெண்டு பேரும் தனிப்பட்ட முறையில் பேசி பார்த்தது இல்ல, எல்லாம் ஒன்னா இருக்கும்போது தான் பேசுவாங்க.

நாங்க செட்டா இருக்கும்போது செட்டாதான் கூட பேசுவாங்க, தனியா பேசுறது குறைவு. பட் ஏதாவது சார் சொன்னா எங்ககிட்ட கேப்பாங்க, இப்போ சார் என்கூட இருந்து பேசி ஏதாவது ஜாலியா பேசிட்டு இருந்தா, என்ன சார் சொன்னாரு, அந்த மாதிரி ஜாலியா கேப்பாங்க. அவங்கன்னு சீன் வரும்போது நடிச்சு, அந்த சீன் ரிலேட்டிவா ஏதாவது பேசுவாங்க.
கேம் செஷன்ஸ் ஏதாவது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்துச்சா என்ற கேள்விக்கு, அதுக்கெல்லாம் டைம் கிடைக்கல, ஏன்னா அப்படியே திரில் திரில்லாதான் போயிட்டு இருந்துச்சு என சிரிச்சிட்டே பதிலளித்தார் ஜனனி.